2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

மட்டு. இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது விழா

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய விருது விழா நேற்று  சனிக்கிழமை ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து போட்டிகளில் பங்கு பற்றி முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டத்தில் பங்குகொள்ளும் 30 இளைஞர், யுவதிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் 11 விசேட தேவையுடையவர்களும் மாவட்டத்தில் முதல் தடவையாக மங்களகம எனும் இடத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 3 சிங்கள இளைஞர்களும் 30 பேரில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் சேவைகள் மன்றத்தினரால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவிகளின் வரவேற்பு நடனம்  இளைஞர்கள் சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்றன.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக், மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா, உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் மற்றும் மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களான ஜே.கலாராணி, நிசாந்தி அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X