2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

தமிழ் மொழி புறக்கணிப்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நடைபெறவிருக்கும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சனிக்கிழமை (02) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2014ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள் விடைகள் மற்றும் 2014இல் எதிர்ப்பார்க்கப்படும் மாதிரி வினாக்கள் அவற்றுக்கான விடைகள் உள்ளடங்கிய தொகுப்பொன்றினை கல்வி அமைச்சின் வெளியீட்டுப்பகுதி இவ்வருட மே மாத முதல்பகுதியில் வெளியிட்டிருந்தது.

சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட இவ்வெளியீட்டின் தமிழாக்கத்தில் 2005-2013 வரையான வினாத்தாள்களும் விடைகளும் மாத்திரமே உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. எதிர்பார்க்கப்படும் வினாக்களின் தொகுப்பு தமிழ் மொழிப்பதிப்பில் இடம்பெற்றிருக்கவில்லை.

இது குறித்து கல்வி அமைச்சின் வெளியீட்டுப்பகுதியைத் தொடர்புகொண்டு கேட்டபோது மொழிபெயர்ப்பிற்கான வசதிகள் இன்மை காரணமாக அவற்றை மொழிபெயர்க்கவில்லை எனவும் பாடசாலைகள் தோறும் குறித்த சிங்கள மொழிமூல வினாத்தாள்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு பாரிய மொழி ரீதியான பாரபட்சத்தை எடுத்துக்காட்டும் விடயமாகும்.

மேற்படி விடயம் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய அரசின் கல்வி அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் உடனடியாக தமிழ் மொழிபெயர்ப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் கிடைக்கச்செய்வது கல்வி அமைச்சின் பொறுப்பாகும் எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X