2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

'வட்டியில்லாக்கடன் மூலம் வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்பாடையச் செய்யலாம்'

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:00 - 1     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வட்டியில்லாக் கடன் வழங்குவதன் ஊடாக வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  மக்களின் பொருளாதாரத்தை  மேம்பாடையச் செய்யலாம் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் உபதலைவர் ஏ.ஐப்.எம்.றபீக் தெரிவித்தார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினுடைய காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் வட்டியில்லாக் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) அதன் காரியாலயத்தில்  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'சுவிட்சர்லாந்து நாட்டில் சிறு கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு பல தொழில்வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. கழிவுக் கடதாசிகளைக்; கொண்டு பல உற்பத்திப் பொருட்களைச் செய்கின்றனர்.

இங்கு  பன்பாய் உற்பத்தியை  அதிகரிப்பதற்கு  ஊக்கமளிக்கலாம். அதேபோல், வட்டியில்லாக் கடன் வழங்குவதன் ஊடாக வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களின் பொருளாதாரத்தை மேம்பாடையச் செய்யலாம்.

இதற்கு செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களின் வழிகாட்டலும் கண்காணிப்பும் அவசியமாகும். இதற்கு ஒரு நிதி மூலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்.

அத்துடன், செஞ்சிலுவைச் சங்கத்தில்  பல தொழில்வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முயற்சி செய்து காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் இந்த தொழில்வாய்ப்புகளை  அதிகம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தைப்; பொறுத்தவரையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளை நல்ல நிலையில் உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்' என்றார்.

இதன்போது, வட்டியில்லாக் கடன் திட்டத்துக்காக மேற்படி றபீக் காத்தான்குடி கிளைக்கு நிதி பங்களிப்பு அளித்தார்.


  Comments - 1

  • Mohammad aswar Saturday, 05 January 2019 02:53 PM

    It's very good for poor people

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X