2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (04)  இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏறாவூரைச் சேர்ந்த எம்.பஷீர் என்பவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

வீதியின் அருகில் மீன் விற்பனை செய்துகொண்டிருந்த ஒருவர் மீதும் அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவர் மீதுமே   வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று  மோதியதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறுமுகத்தான் குடியிருப்பு காளி கோவில் வீதியைச் சேர்ந்த நாகமுத்து பாலகிருஷ்ணன் (வயது 54), ராசலிங்கம் ராஜேந்திரன் (வயது 27)
ஆகியோரே விபத்தில் மரணமடைந்துள்ளனர்.

மேற்படி வாகனச் சாரதியை கைதுசெய்துள்ளதுடன், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X