2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கு முருகன் ஆலய வளாகத்தில் 5 இலட்சம் ரூபாய்  செலவில் கட்டி முடிக்கப்பட்ட விவேகானந்தா அறநெறிப் பாடசாலையை, கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தா மகராஜ் இன்று செவ்வாய்க்கிழமை(05) திறந்து வைத்தார்.

மஞ்சந்தொடுவாய் ஆலடி சித்தி விநாயகர், கண்ணகியம்மன் ஆலய தலைவர் எஸ். உருத்திரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் தனது சொந்த நிதியிலிருந்து ஒலிபெருக்கி உபகரணங்களைக் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் ரோய் டீ மெல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X