2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

கல்வி அபிவிருத்தி கருத்தரங்கு

George   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான முழுநாள் கருத்தரங்கு கலந்துரையாடல், செவ்வாய்க்கிழமை (05) காலை அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கு கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், பிரதேச செயலாளர்கள், கல்வித்திணைக்கள பணிப்பாளர்கள், கல்வி சார் அதிகாரிகள், சிறுவர் நலன்பேண் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைக் கல்வி அபிவிருத்தி, பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகல்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. அத்துடன், பாடசாலைக்கல்வி தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான வழிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

அத்துடன் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பாக கவனத்துடன் செயற்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X