2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளர் கௌரவிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


பெண்கள் முகாமைத்துவ அபிவிருத்தி திட்டத்தினரின் அனுசரணையில் நாட்டிலுள்ள சிறந்த பெண் சுயதொழில்  முயற்சியாளருக்கான சாதனை விருது வழங்கும் நிகழ்வு கடந்த (25)ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. 

இவ் விருது வழங்கும் நிகழ்வுக்கு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வேவ்வேறு வகையான பெண் சுயதொழில்  முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது, மட்டக்களப்பு முகத்துவாரம் பார் வீதியிலுள்ள திருமதி. விஜயலெட்சுமி அன்ரனி ஜேசுதாசன் படங்களுக்கு பிரேம் செய்தற்காகன சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த பெண்கள் சுயதொழில் முயற்சியாளருக்கான சாதனை என்ற விருதை பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசீல் ராஜபக்ஷவிடம் இருந்து இவர் பெற்றுக்கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X