2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

மின் தடைக்கு காகங்களே காரணம்: ஏறாவூர் மின் அத்தியட்சகர்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் மற்றும் செங்கலடிப் பிரதேசங்களில்  அடிக்கடி மின் தடை ஏற்படுதால் அப்பகுதி பாவினையாளர்கள் அதிக சிரமங்களை எதிர் கொண்டுவருகின்றனர். இது தொடர்பாக, இலங்கை மின்சார சபையின் ஏறாவூர்-செங்கலடிப் பிரதேசத்துக்குப் பொறுப்பான மின் பாவனையாளர் சேவை நிலையத்தின்  மின் அத்தியட்சகர் சி. சுவேந்திரனிடம் கேட்டபோது, மின் தடை ஏற்படுவதற்கு காகங்களே காரணம் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

ஏறாவூரில் அதிகளவான அரிசி ஆலைகள் உள்ளன. இவற்றை நாடி காகங்கள் வருகின்றன. அவ்வாறு வருகின்ற காகங்கள் மின்சாரக் கம்பிகளில் அமர்கின்றபோது அவை மின்சாரம் தாக்கி கருகிச் செத்து மடிகின்றன.

இதனால், மாவெடிவேம்பு பகுதியில் அமைந்துள்ள பிரதான மின் இணைப்பு உருகி (குரளந) செயலிழந்து விடுகின்றது என்றார்.

கூடு கட்டுவதற்காக சிறிய கம்பிகளைத் தூக்கிச் செல்லும் காகங்கள் அவற்றை மின்சாரக் கம்பிகளில் போடுவதால் மின் உருகி செயலிழந்து மின் தடை ஏற்பட்டு விடுகின்றது என்றும் அவர் கூறினார்.

எனினும் ஏறாவூர் மற்றும் செங்கலடிப் பிரதேசத்தில் அடிக்கடி ஏற்படும்  மின் தடைக்கு அங்குள்ள மின் மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுது கண்டு பிடிக்கப்படாமலிருப்பதே காரணம் என மட்டக்களப்பு மின் அத்தியட்சகர் பணிமனையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இதனை அந்தந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மின் அத்தியட்சகர் பகுதியினரே கண்டு பிடித்து பழுதை சீர் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாளொன்றுக்கு இரவிலும் பகலிலும்  பல தடவைகள் திடீர் திடீரென மின்சாரம் தடைப்படுத்தப்படுகின்றது.

முன்னறிவித்தலின்றி இவ்வாறு மின் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் உட்பட மின்சாரம் மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் இடங்களான பல்கலைக்கழகம், பிரதேச செயலகங்கள் மற்றும் இன்னபிற இடங்களின் கருமங்கள் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்து.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X