2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

காத்தான்குடியில் மலேரியா பரிசோதனை

Thipaan   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு பிராந்திய சுகாதா அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்ட மலேரியா பரிசோதனை நடவடிக்கை, காத்தான்குடி பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (06)  நடைபெற்றது.

பிராந்திய மலேரியா தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி மேகலா ரவிச்சந்திரனின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இந் நடவடிக்கையில், காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களின் இரத்த மாதிரிகளை, பொதுச்சுகாதார வெளிக்கள பரிசோதகர்கள் சேகரித்துக் கொண்டனர்.

இந்த பரிசோதனை நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு சுகாதார அலுவலகப்பிரிவிலுள்ள மலேரியா தடுப்பு அதிகாரிகள், பொதுச்சுகாதா வெளிக்கள பரிசோதகர்கள் ஈடுபட்டனர்.

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடந்த மாதம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு சென்று திரும்பிய நிலையில் அவருக்கு மலேரியா நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்தே காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள வர்த்தகர்கள் மலேரியா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக,  பொதுச்சுகாதா வெளிக்கள பரிசோதகர் எஸ்.சதீஸ் தெரிவித்தார்.

இதன்போது, மலேரியா தொடர்பான விழிப்பூட்டலையும் பரிசோதகர்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X