2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

ஏறாவூருக்கு காதி நீதிபதி நியமனம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நீதி நிர்வாகப் பிரிவுக்கான புதிய காதி நீதிபதியாக அப்துல் காதர் அப்துல் மஜீத் மௌலவி நியமிக்கப்பட்டுள்ளார் என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் டபிள்யூ.கே.விஜேரத்ன அறிவித்துள்ளார்.

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலாகும் விதத்தில் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்நியமனம் மூன்று வருடங்களுக்கானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய நியமனம் பெற்ற காதி நீதிபதி அப்துல் மஜீத்;, ஏறாவூர் உலமாசபையின்  முன்னாள் தலைவராகவும் ஏறாவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராகவும் கடமையாற்றியவர்.

இவர் தற்போது ஏறாவூர் முஹைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாமாகவும் கடமையாற்றி வருகின்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X