2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

பெண்ணைக் கடத்தி பேயோட்டிய பிக்கு விவகாரம்: அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வெலிக்கந்தை விகாரையின் பிக்குவையும் அவரது துணையாட்களையும் அடையாளம் காட்டும் அடையாள அணிவகுப்பு ஓகஸ்ட் 20ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அடையாள அணிவகுப்பு இன்று (06) ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெறவிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவெடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த அரசாங்க ஊழியரான குடும்பப் பெண்ணைக் கடத்தி, கண்ணைக் கட்டி பேயோட்டியதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனடிப்படையில், அடிப்படையில் பௌத்த பிக்கு ஒருவரையும் அவரது துணையாட்கள் மூவரையும் கடந்த ஞாயிறன்று (03) பிற்பகல் பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள விகாரை ஒன்றிலிருந்த வேளையில் ஏறாவூர் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் கடமையாற்றும் தன்னைக் கடத்தி வெலிக்கந்தையிலுள்ள விகாரைக்குக் கொண்டு சென்ற பின்னர் தனது கண்களைக் கட்டி, மரத்தில் கட்டி வைத்து பேயோட்டினர் என்று சம்பந்தப்பட்ட பெண் ஏறாவூர் பொலிஸில் செய்திருந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்படி பிக்குவும் அவரது துணையாட்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருந்ததாக ஏறாவூர் பொலிஸார் கூறினர்.

தனக்குப் பேய் எதுவும் பிடித்திருக்கவில்லை என்றும் தான் பூரண சித்த சுவாதீனம்  உடைய சிறந்த அரசாங்க உத்தியோகத்தர் என்றும் அப்பெண் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X