2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

சிறந்த மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதராக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் இரத்தினம் நந்தகுமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இவர் சிறந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகராக கடமையாற்றிவரும் இவர் மட்டக்களப்பு அமிர்தகழியை சேர்ந்த திருதிருமதி இரத்தினசிங்கம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும் எருவில் திருதிருமதி இளையதம்பி தம்பதியினரின் மருமகனுமாவார்.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீசித்திவிநாயகர் பாடசாலை,புனித மைக்கேல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரருமாவார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X