2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்து: ஒருவர் காயம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ். பாக்கியநாதன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் வியாழக்கிழமை(7) இடம்பெற்ற வாகன விபத்தில் வியாபாரி ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பதூர்தீன் (வயது 49) என்ற வியாபாரியே இவ்விபத்தில் காயமடைந்துள்ளார்.

காலிலும் தலையிலும் பாரதூரமான காயங்களுக்குள்ளான இவர் உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் பயணம் செய்த படி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வளவொன்றுக்குள் புகுந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X