2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

ஆரையம்பதிக்கு புதிய வீடுகள்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மேற்கொண்டு வரும் கூட்டு ஸகாத் திட்டத்தின் கீழ் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 25 வீடுகளை நிர்மாணிக்கவுள்ளது.

வீடு வசதியற்ற வறிய குடும்பங்களுக்காக இலங்கை ஜமாஅதே இஸ்லாமிய சமூக சேவைப் பிரிவின் நிதியுதவியுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இந்த வீடுகளை நிர்மாணிக்கவுள்ளது.

இந்த வீடுகள் நிர்மானம் தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு ஸகாத் நிதியத்திற்கும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் சமூக சேவைப் பிரிவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை (6) கைச்சாத்திடப்பட்டது.

காத்தான்குடி, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் மற்றும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் சமூக சேவைப் பிரிவின் கிழக்கு பிராந்திய பொறுப்பாளர் எம்.றிஸ்வி ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில், சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க். ஏ.எல்.எம். சபீல் (நளீமி) மற்றும் உப செயலாளர் எம்.எம்.ஜௌபர் உட்பட அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சம்மேளன கூட்டு ஸகாத் நிதியத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஏழை மக்களுக்கான வீட்டுத்திட்ட செயற்பாடுகளில் ஓர் அங்கமாக, ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகரம் பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள காணியில் இந்த 25 வீடுகளை நிர்மாணிக்கப்படவுள்ளன.

மேற்படி வீடமைப்புத் திட்டத்திற்காக காத்தான்குடி பிரதேச தனவந்தர்களினால் வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு சுமார் 3 ½ ஏக்கர் கானி சிகரம் பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்டது.

வீடுகளில்லாமல் அநாதரவாக வாழும் வறிய குடும்பங்களுக்கு இவ்வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க். ஏ.எல்.எம். சபீல் (நளீமி) தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X