2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தலசீமியா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்
, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தலசீமியா நோயாளர்களுக்கான என்புமச்சை மாற்றீடுச் சிகிச்சை பற்றிய விளக்கங்கள் மற்றும் பரிசோதனைகள் என்பன மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (21) இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கே.நவரட்ணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்;, சிறுவர் நல வைத்திய நிபுணர் சித்திரா கடம்பநாதன், இத்தாலியைச் சேர்ந்த என்புமச்சை மாற்றீட்டுக் குழு தலைமை வைத்தியக் கலாநிதி லொரன்சி பௌல்க்னெர், இலங்கை தலசீமியா வட்டத்தின் அமைப்பாளர் வைத்தியக் கலாநிதி கலிங்க நாணயக்கார, சிறுவர் நல வைத்திய நிபுணர்களான விஜி திருக்குமாரன், ஏஞ்சலா அருள்பிரகாசம், திப்தீ நாணயக்கார மற்றும் இலங்கை தலசீமியா வட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தலசீமியா ஒரு பரம்பரையான குருதி நோயாகும். தலசீமியா நோய் காவிகள் உள்ள ஆண் பெண் திருமணம் செய்தால் தலசீமியா நோயுள்ள குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் என அறியப்பட்டுள்ளது.

இலங்கை தலசீமியா வட்டத்தின் புள்ளி விபரங்களின்படி இலங்கையில் 2,700 நோயாளர்களும், 500,000க்கு மேலான நோய் காவிகளும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் பலருக்கு தாங்கள் தலசீமியா நோய் காவிகள் என்பது தெரியாமல் உள்ளது.

இவ் அமைப்பானது நோயுள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு சிசிட்சை முறைகளையும், சிகிட்சை பெறும் உரிமைகளையும் பற்றி ஆலோசனை வழங்கி வருகின்றது.

இலங்கையில் தலசீமியா நோயைக் கண்டறிவதும் மற்றும் நோய் காவிகளை இனங்காண்பதும் தலசீமியா வட்டத்தின் கடமையாகும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X