2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'டொம் ஜோசி' புதிய இன மா மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பழச் செய்கையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயத் திணைக்களத்தினால் பழ மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் டொம் ஜோசி எனப்படும் புதிய இன மா மரக்கன்றுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, காத்தான்குடி விவசாய போதனாசிரியர் அலுவலகப் பிரிவிலுள்ள பழச் செய்கையாளர்களுக்கு டொம் ஜோசி எனப்படும் புதிய இன மா மரக்கன்றுகள் சனிக்கிழமை (23) வழங்கப்பட்டன.

இந்த மா மரக்கன்றுகளை காத்தான்குடி விவசாய போதனாசிரியர் திருமதி குந்தவை ரவிசங்கர் வழங்கி வைத்தார்.

இதன்போது, மா கன்றுகளை எவ்வாறு நட்டு வளர்த்து எடுப்பது என்பது தொடர்பிலான செயல்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது.
இதில் முதல் கட்டமாக பத்து பேருக்கு இக் கன்றுகள் வழங்கப்பட்டன.

டொம் ஜோசி வகை மா மரத்தின் மூலம் பெறப்படும் மாங்காயானது ஒரு கிலோ நிறையுடையதாக இருக்கும் என  காத்தான்குடி விவசாய போதனாசிரியர் திருமதி குந்தவை ரவிசங்கர் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X