2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மத்தியஸ்த சபைகள் சுதந்திரமாக இயங்குகின்றன: ஹக்கீம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'மத்தியஸ்த சபைகள் சுதந்திரமாக இயங்குகின்றன. பிணக்குகளை தீர்த்துக் கொள்ளக் கூடிய இடமாகவும் இது காணப்படுகின்றது' என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடி மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் நீதியமைச்சர் ஹக்கீமை காத்தான்குடியில் வைத்து சனிக்கிழமை(23) மாலை சந்தித்தனர். இச்சந்திப்பின்போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'மத்தியஸ்த சபைகள் சுதந்திரமாக இயங்குவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மத்தியஸ்த சபைகளின் பணிகளை ஒரு கட்டிடத்திற்குள் முடக்கிவிடாமல் அதன் செயற்பாடுகள் சுதந்திரமாகவும் சுயேட்சையாகவும் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்தியஸ்த சபைகளில் பிணக்குகள் ஆற்றுப்படுத்தப்படும்போது அதனோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட வேண்டும் என்பதையும் எதிர்காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளோம்.

உதாரணமாக காணி பிரச்சினைகள் என்றால், காணி அதிகாரியை அதன்போது மத்தியஸ்த சபைக்கு அழைக்க வேண்டும். இலங்கையின் இந்த நடைமுறையை சில நாடுகளும் பின் பற்றுகின்றன.

மத்தியஸ்த சபைகளில் பெண்களும் பங்கெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். எதிர்காலத்தில் விசேட மத்தியஸ்த சபைகளை உருவாக்கவும் நீதியமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது' என தெரிவித்தார்.

இதன்போது காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தேவை தொடர்பான கடிதமொன்றும் அமைச்சா ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X