2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு பேரணி பிற்போடப்பட்டது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனையை முற்றாகத் தடுக்கும் முகமாக ஞாயிற்றுக்கிழமை (24) ஏறாவூரில் இடம்பெறவிருந்த விழிப்புணர்வுப் பேரணி தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சமீப காலங்களாக அதிகரித்துள்ள போதைப் பொருள் விநியோகம் மற்றும் பாவனையை இந்தப் பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக பொலிஸ், பிரதேச செயலாளர், சுகாதாரப் பகுதி, மதத் தலைவர்கள், கல்விச் சமூகம், சமூகநல ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்துறை சார்ந்த செயற்பாட்டாளர்களைக் கொண்ட ஒரு குழு அண்மையில், ஏறாவூரில் ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா தலைமையில் அமைக்கப்பட்டது.

செயற்பாட்டாளர் குழுவின் தீர்மானத்தின்படி ஞாயிற்றுக்கிழமை(24) ஏறாவூர் நகரில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி ஒன்று நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும், இந்த விழிப்புணர்வுப் பேரணி தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் செயற்பாட்டாளர் குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்தார்.

பேரணி பிற்போடப்பட்டதற்கான காரணம் எதுவும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X