2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'ஊடகவியலாளர்களின் நலன்சார்ந்த அமைப்பாக மட். ஐக்கிய ஊடகவியலாளர் அமைப்பு செயற்படும்'

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல ஊடகவியலாளர்களையும் ஒன்றுபடுத்தி ஊடகவியலாளர்களின் நலன்சார்ந்த அமைப்பாக மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் அமைப்பு செயற்படும்' என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இ.பாக்கியராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சக்தி வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(24) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இருந்தது. அந்தச் சங்கம் மட்டக்களப்பில் இருந்தாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களையும் ஒன்றுபடுத்தி செயற்பட்டது.

அதற்கு பிறகு மாவட்டத்தில் அனைத்து ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கிய ஒரு ஊடகவியலாளர் அமைப்பு இல்லாமலேயே இருந்து வந்தது.

பிரதேசம் சார்ந்து சமூகம் சார்ந்து ஊடகவியலாளர் அமைப்புக்கள் இருந்தாலும்கூட மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக ஒரு அமைப்பு இல்லாமல் காணப்பட்டது.

தற்போது இந்த ஊடகவியலாளர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கி ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் செயற்படுத்த வேண்டும்.

அப்போதுதான் நாம் நமது செயற்பாடுகளை சரியாக நிறைவேற்ற முடியும். இதற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகத்துறையில் பணியாற்றுகின்ற சகலரையும் இந்த அமைப்புக்குள் உள்வாங்கி அனைவரையும் ஒன்றுபடுத்தி இந்த மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் அமைப்பை கட்டிவளர்க்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X