2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பிரிட்டிஷ் கவுன்ஸில் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 36 ஆங்கில ஆசிரியர்களுக்கு, பிரிட்டிஷ் கவுன்ஸில் மூலம் ஆங்கில பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறார்களிடையே ஆங்கில அறிவை மேம்படுத்தல், உரையாடுதல், பேசுதல் மற்றும் ஈடுபடுதல் (Speaking Promoting and Involving Children in English)போன்றவற்றுக்காக, ஆங்கிலத்தைப் போதிக்கும் மாற்றுத் தாய்மொழியைக் கொண்ட ஆசிரியர்களுக்காக இந்த பயிற்சி நெறி வடிவமைக்கப்பட்டுள்ளதாக, தருணய ஹெடக் (இளைஞர்களுக்கான நாளை) அமைப்பின் கல்விப் பிரிவுத் தலைவி சாவித்திரி பெர்னான்டோ தெரிவித்தார்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (25) ஆரம்பமான 5 நாள் வதிவிடப் பயிற்சி நெறியை, பிரட்டிஷ் கவுன்ஸிலைச் சேர்ந்த போதனாசிரியர் டேனியல கிராவஸ் மற்றும் விக்டோரியா கொட்சால் ஆகியோர் நடத்துகின்றனர்.

இன்றைய துவக்க நிகழ்வுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தருணய ஹெடக் (இளைஞர்களுக்கான நாளை) அமைப்பின் கல்விப் பிரிவுத் தலைவி சாவித்திரி பெர்னான்டோ, மொஹான் சமரசிங்ஹ ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகரசபைத் தவிசாளருமான அலிஸாஹிர் மௌலானா இந்த நிகழ்ச்சியின் இணைப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X