2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் கிராம அலுவலகர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் பூமரத்தடிச்சேனை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த கிராம அலுவலகர் ஒருவர்  திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

வெருகல்முகத்துவாரம் பிரிவில் கடமையாற்றும் கிராம அலுவலகரான சித்திரவேல் லிங்கேஸ்வரன் (வயது 40) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

சேருநுவர பக்கமிருந்து மேற்படி பிரதான வீதி வழியாக வந்துகொண்டிருந்த கன்டர்; ரக வாகனம் ஒன்று  வீதியை விட்டுத் திரும்பியபோது, வெருகல் பிரதேச செயலகத்தை நோக்கி வந்துகொண்டிருந்த கிராம அலுவலகரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
கன்டர் ரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X