2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தினர் குடியிருந்த பகுதிகளில் மீள்குடியேற்றுவது தொடர்பான கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர்; குடியிருந்த பகுதிகளில் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பான  கூட்டம்  மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.

இராணுவத்தினர் குடியிருந்த பகுதிகள் கண்ணிவெடிகள் அற்ற பிரதேசம் என்று கண்ணிவெடிகளை அகற்றும் பிரிவினர் உறுதிப்படுத்திய  பின்னர்  காணி உரித்துடையவர்களுக்கு வீடுகள், குடிநீர், மலசலகூடங்கள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக  மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர்; குடியிருந்த  பகுதிகளைச் சேர்ந்த  560 குடும்பங்களில் 360 குடும்பங்கள் மீள்குடியேற்ற அமைச்சால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டுள்ளன. மீதி 200 குடும்பங்களையும் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்சழியன், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எச்.சுகததாச, அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.நஜிமுடீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X