2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டு போதனா வைத்தியசாலையில் வேலை நிறுத்த போராட்டம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருந்தாளர்கள், தொழில் நுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள், கதிரியக்க பிரிவினர், ஆய்வு கூட தொழிநுட்பவியலாளர்கள் உட்பட 5 பிரிவினர் இணைந்து இன்று (26) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணி  நிறுத்த போராட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

இதனால் இச்சேவைகளில் மாத்திரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம். இப்றாலெப்பை தெரிவித்தார்.

வைத்தியசாலையின் வழமையான அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோயாளர்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 75  துறைசார் உத்தியோகத்தர்கள் பணி பகிஸ்கரிப்பில் இணைந்துள்ளதாக அதன் தலைவர் எம்.சாகிர் தெரிவித்தார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X