2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்தினுடைய அபிவிருத்திக்காக ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் 50 இலட்சம் ரூபாய் நிதியை  ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூதின் இணைப்புச் செயலாளரும் ஏறாவூர் நகரசபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

இதேபோன்று, மட்டக்களப்பு பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயத்துக்கு  20 இலட்சம் ரூபாய் நிதியும்  ஏறாவூர் அல் அஸ்கர் வித்தியாலயத்துக்கு 20 இலட்சம் ரூபாய் நிதியும் ஏறாவூர் மிச்சி நகர் வித்தியாலயத்துக்கு 05 இலட்சம் ரூபாய் நிதியும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்துக்கு 15 இலட்சம் ரூபாய் நிதியும்  றெதிதென்ன ஹிறாஸ் வித்தியாலயத்துக்கு 02  இலட்சம் ரூபாய் நிதியும் வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்துக்கு 01 இலட்சம் ரூபாய் நிதியும் மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்துக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சரின் விசேட நிதியொதுக்கீட்டில் இந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X