2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 05 பெண் தலைமைத்துவக்  குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ஆடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் எய்ட் நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை வழங்கியதாக செங்கலடிப் பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

தலா குடும்பத்துக்கு  தலா 30,000  ரூபாய் பெறுமதியான வளர்ப்பு இன ஆடுகள் வழங்கப்பட்டன.

செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொடுவாமடுக் கிராமத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் எய்ட் நிறுவன மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி பஸ்லான் தாஸிம், வாழ்வாதாரத்திட்ட அலுவலர் எம்.நுஸ்ரத் அலி, நிர்வாக உதவியாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத், கொடுவாமடு கிராம சேவகர் எஸ்.கோகுலராஜ், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திருஞானம் யுகேந்திரன், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X