2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு  பிள்ளையாரடியைச் சேர்ந்த 39 வயதான ஸ்கந்தராஜ் மிபீந்திரன், மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பிள்ளையின் தந்தையான இவரை, நேற்றிரவு 10 மணியிலிருந்து காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவர் பயணித்த சைக்கிளை  மீட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சடலம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X