2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சமுர்த்திப் பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 01 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் சமுர்த்திப் பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்வு  புளியந்தீவு சமுர்த்தி வங்கிக் கிளையில் இன்று திங்கட்கிழமை (01) இடம்பெற்றது.

திவி நெகும சஹன அருண திட்டத்தின் கீழ் பயனாளிகள் 5,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை 4 சதவீத வட்டியுடன் ஒரு வருடத்தின் பின்பு 24 தவணைகளில் செலுத்தமுடியும்.

இக்கடன் மட்டக்களப்பில்,  புளியந்தீவு, கல்லடி, இருதயபுரம் கிழக்கு மற்றும் இருதயபுரம் ஆகிய சமுர்த்தி வங்கிகளில் 250 பேருக்கு 4.2 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. தவராஜா, புளியந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே. நவரஞ்சன், முகாமைத்துவப் பணிப்பாளர் கே. நிர்மலதா மற்றும் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் வா. கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு கடன்களை வழங்கி வைத்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X