2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

த.ம.வி.பு. கட்சியின் முக்கியஸ்தர்கள் ஸ்ரீ.சு. கட்சியில் இணைவு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தாமோதரம் உதயஜீவதாஸ் மற்றும் உறுப்பினரான கே.ஞானமுத்து ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை(31) இணைந்துகொண்டனர்.

சந்திவெளியில் நடைபெற்ற தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் போது மேற்படி இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் பிரதியமைச்சர் முரளீதரனுடன் இணைந்து சேவையாற்றப் போவதாக அறிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தாமோதரம் உதயஜீவதாஸ்,

'கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கைகோர்த்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து செயற்பட்டால்; பாரிய அபிவிருத்திகளை நேரடியாக அனுபவிக்க முடியும்.

பிரதியமைச்சர் முரளிதரன் அரசாங்கத்துடன் இணைந்து பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பல துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.

எமது பிரதேச இளைஞர் யுவதிகள் சுதந்திரமாக வாழ்வதற்கு ஒரு சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியைப் பொறுப்பெடுத்ததன் பின்னர்தான் அபிவிருத்திகள் நேரடியாக எமது மாவட்ட மக்களை வந்தடைந்தன.

அதனடிப்டையில் இன்று நானும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் முன்னிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டுள்ளேன்.

அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மாத்திரமே எமது மக்களுடைய அபிவிருத்திகளை நேரடியாகக் கொண்டுவர முடியும் என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் காலத்துக்குகாலம் வரும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்து பல துன்ப துயரங்களை அனுபவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் நாங்கள் அனைவரும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்து செயற்பட வேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X