2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேவைக்கதிகமாக கடன் பெறக்கூடாது: சிப்லி பாறூக்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தேவைக்கு அதிகமாக கடன்களை பெறக்கூடாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பெரிறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

'சகன அருண' கடன் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் திவிநெகும பயனாளிகளுக்கு கடன்களை வழங்கி வைக்கும் நிகழ்வு  காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  நேற்று திங்கட்கிழமை (1) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இன்று சிலர் தேவைக்கு அதிகமாக கடன்களை பெற்று, அவற்றைச் செலுத்திக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். பொருட்களை மேலதிகமாக வாங்கவேண்டும் அல்லது நாம் சொகுசாக வாழவேண்டும் என்பதற்காக கடன் பெறக்கூடாது.

உரிய நோக்கத்துக்காக, தொழிலுக்காக, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடன்களைப பெற்று அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்காகவே அரசாங்கம் இவ்வாறான கடன்களை தருகின்றது.

வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பெருந்தொகையான வட்டிக்கு கடன் எடுத்து சிரமப்படுவதை தவிர்ப்பதற்காகவும் அரசாங்கம் இந்த இலகு கடனை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனி நபர் வருமானத்தை அதிகரிக்கச் செய்யவும் அதன் மூலம் குடும்;ப வருமானத்தை அதிகரித்து வாழ்வில் செழிப்பை ஏற்படுத்தவும் இந்தத் திட்டம் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X