2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பண மோசடி செய்த இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பெயரை பயன்படுத்தி  7 இளைஞர், யுவதிகளிடம்; 20 இலட்சம் ரூபாய் மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சந்தேக நபர்களை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (1) ஆஜர்படுத்தியபோதே நீதவான் என்.எம்.அப்துல்லாஹ் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பெயரை பயன்படுத்தி போலி ஆவணம் ஒன்றில் அவரது கையொப்பம் போன்று போலி கையொப்பத்தை வைத்து இவ்விருவரும் ஏமாற்றியுள்ளார்.

பணம் கொடுத்து ஏமாறிய இளைஞர், யுவதிகள் இந்த விடயம் தொடர்பில்  முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.  இந்த நிலையில், சிவநேசத்துரை சந்திரகாந்தன்; மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்தே சந்தேகத்தின் பேரில்  இருவரை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (31) கைதுசெய்தனர்.

இந்த பண மோசடிச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்துவரும் மட்டக்களப்பு பொலிஸார், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் ஒரு சில சந்தேக நபர்களை கைதுசெய்யவுள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X