2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆசிரிய பயிலுநர் மாணவர்கள் வரவேற்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரி;க்கு புதிய கல்வி ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய பயிலுநர் மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02) வரவேற்கப்பட்டனர்.

2014ஆம் ஆண்டு  தொடக்கம் 2017 கல்வி ஆண்டுக்கான மாணவர்களில் ஆரம்பக்கல்வி பாடத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட 83 மாணவர்களும் விஞ்ஞான பாடத்துக்கு  தெரிவுசெய்யப்பட்ட 18 மாணவர்களும்  வரவேற்கப்பட்டனர்.

ஏனைய பாடங்களான சித்திரம், சங்கீதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரிய மாணவர்கள் பின்னர் சமூகமளிப்பார்கள்.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி; பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.பாஸ்கரன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிஸ்கந்தராஜா, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.புள்ளநாயகம் உட்பட கல்லூரியின் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், அதிகாரிகள், ஆசிரிய பயிலுநர் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

2014ஆம் ஆண்டு  தொடக்கம் 2017 கல்வி ஆண்டுக்காக மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி;க்கு சகல பாடங்களுக்குமாக 195 ஆசிரிய பயிலுநர் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரி; பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X