2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பணிப்பெண்களாகச் செல்பவர்களுக்கு உதவ வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வீட்டுப் பணிப்பெண்களாக  சுற்றுலா வி;ஸா மூலம் இலங்கையிலிருந்து, டுபாய் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் இந்த நிலையில்,  அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் டுபாயில் உள்ள இலங்கை நாட்டுப் பிரதித் தூதுவர் எம்.எம்.அப்துர் றஹீம்  தெரிவித்துள்ளார்.

டுபாய் நாட்டின் குடிவரவு, குடியகழ்வு பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் முகம்மட் அகமட் அல்மராயை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

டுபாயிலுள்ள இலங்கையர்களின் நலன் மற்றும் அங்கு  நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களின் குடியகழ்வு தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக டுபாயில் உள்ள இலங்கை நாட்டுப் பிரதி தூதுவர் எம்.எம்.அப்துர் றஹீம் தெரிவித்தார்.

வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் பெண்கள்; மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறியதாகவும் அவர் கூறினார். 
அண்மைக்காலமாக கூடுதலான இலங்கைப் பெண்கள் சுற்றுலா  விஸா மூலம் டுபாய்க்கு  அழைத்துவரப்பட்டு வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.   இந்த நிலையில், வேலைப்பழு மற்றும் ஏனைய பிரச்சினைகள் காரணமாக அவ்வீட்டை விட்டு வெளியே தப்பியோடும் இலங்கைப் பெண்கள் மேலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன்,  நிர்க்கதியாகி தவிக்கின்றனர்.

இவ்வாறான இலங்கைப் பெண்களுக்கு டுபாய் நாட்டிலுள்ள குடிவரவு குடியகழ்வு உதவ வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில்  உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக டுபாய் நாட்டின் குடிவரவு குடியகழ்வு பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் முகம்மட் அகமட் அல்மராய் கூறியதாகவும் அவர் கூறினார்.

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X