2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடிச்சல் காட்டில் ஆயுதங்கள் மீட்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வடிச்சல் காட்டில் ஒரு தொகுதி ஆயுதங்கள் செவ்வாய்க்கிழமை (2) மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ரீ- 56 ரக துப்பாக்கி மகஸின்கள் 2, ரீ-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 192, மோட்டோர் குண்டு 1 (61 ரகம்) என்பனவே மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு புலனாய்வுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து கரடியனாறு பிரிவுக்குப் பொறுப்பான புலனாய்வுப் பகுதியினரால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டு கரடியனாறு பொலிஸில் செவ்வாய்க்கிழமை(2) பிற்பகல் ஒப்படைக்கப்பட்டன.

இந்த ஆயுதங்கள் குறித்து புலனாய்வுப் பொலிஸாரும் கரடியனாறுப் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X