2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டு. வைத்தியசாலை - கொக்கட்டிச்சோலை பஸ் சேவை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாண பயணிகள் வீதி போக்குவரத்து அதிகாரசபையால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் கொக்கட்டிச்சோலைக்கும் இடையில் தனியார் பஸ் போக்குவரத்துச் சேவை இன்று புதன்கிழமையிலிருந்து (3) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு 2 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமாகும்  இந்த தனியார் பஸ் போக்குவரத்துச் சேவையானது மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுர வழியாகத்; திரும்பி ஊர் வீதி வழியாக காத்தான்குடி, ஆரையம்பதி ஊர் வீதிகள் ஊடாக காங்கேயனோடை, மாவிலங்கத்துரை, ஒல்லிக்குளம், மண்முனைப்பாலத்தின் ஊடாக கொக்கட்டிச்சோலை தனியார் பஸ் தரிப்பிடத்தைச் சென்றடையும்.
மேற்படி பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு ஆரையம்பதி சிவில் பாதுகாப்புக்குழு, காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு  கோரிக்கை விடுத்தது. இதை அடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுத்தார்.  எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் இந்த தனியார் பஸ் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தனியார் பஸ் போக்குவரத்து சேவையை  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் ஆரம்பித்துவைத்தார்.
ஆரையம்பதி ஊர் வீதிச் சந்தியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர,  கிழக்கு மாகாண பயணிகள் வீதி போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.அன்வர் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X