2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களில் சோதனை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகரசபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் நகரத்தின் பல இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் இன்று புதன்கிழமை (3)   சோதனை செய்யப்பட்டன.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சிறைச்சாலை மற்றும் ஈஸ்டன் சர்வதேச பாடசாலை அமைந்துள்ள வளாகங்கள் இதன்போது சோதனை செய்யப்பட்டன.

ஒவ்வொரு வருடமும்  ஜுன், ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் குறைந்து செப்டெம்பர் மாதம்  அதிகரிப்பதால் அவற்றை பரீட்சிக்கும் முன்னோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கே.தேவநேசன் தெரிவித்தார்.

இதன்போது நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர். அத்துடன், தேங்கிக் கிடந்த குப்பைகள் மாநகர தொழிலாளர்களினால் சுத்திகரிக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X