2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தல்; விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகர எல்லையினுள் பொலித்தீன் பாவனை அதிகரித்துள்ள நிலையில், இதனால்  ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி தொடர்பில் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு நகர மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றது.

யுனொப்ஸ் அனுசரணையுடன்  இக்கருத்தரங்கு நடைபெற்றது.

நகரில் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்குடன் மாநகரசபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் அரச அலுவலகங்கள், பாடசாலைகளிலும் வியாபாரிகளுக்கும் பொலித்தீன் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில்  விளங்கப்படுத்துவதன் மூலம் பொலித்தீன்  பாவனையை கட்டுப்படுத்தமுடியும் என மாநகரசபை  ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு சேகரிக்கும் பகுதியில் சேகரிக்கப்பட்ட பாரியளவிலான  பொலித்தீன்களை மீள்சுழற்சிக்கு உட்படுதுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X