2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குற்றச் செயல்களை குறைப்பதற்கு பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்: ஜெயசேகர

Gavitha   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'குற்றச் செயல்களை குறைப்பதற்கு பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்' என மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபரும் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான கபில ஜெயசேகர தெரிவித்தார்.

148ஆவது பொலிஸ் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் இன்று புதன்கிழமை (03) நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிவில் பாதுகாப்பு குழுக்களை பலப்படுத்துவதுடன் அந்தக் குழுக்களினுடாக சமூக மட்டத்தில் பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்தல், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் மீதான வன்முறை போன்ற சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்தி அவற்றை சமூகத்திலிருந்து இல்லாதொழிப்பதற்கு பொலிஸார் பாடுபடவேண்டும்.

இன்று நாட்டில் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு வேலைத்திட்டத்தில் பொலிஸார் ஈடுபடுவதுடன் டெங்குக்கு எதிரான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களில் பொலிஸார் அக்கறை காட்டி செயற்படவேண்டும்.

டெங்கு என்பது இன்று மிக முக்கிய ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது. அந்த டெங்கை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்களில் பொலிஸார் அக்கறை காட்டி செயற்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X