2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் வயோதிபர் கைது

Gavitha   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயன்கேணி பாரதிபுரம் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (02) 64 வயதுடைய வயோதிபர் ஒருவரைத் தாம் கைது செய்ததாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார்.

சந்தேக நபரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 572 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகத் தெரிவித்த பொலிஸ் பொறுப்பதிகாரி சந்தேகநபரை இன்று புதன்கிழமை (03) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

சமீப காலமாக ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தீவிரமான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் போதைப் பொருளோடு சம்பந்தப்பட்ட நபர்களை நீதிமன்றில் நிறுத்தி தண்டணை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X