2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போரதீவுப்பற்றில் டெங்கொழிப்புத் திட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

தேசிய டெங்கொழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் போராதீவுப்பற்று செயலக பிரிவில்  டெங்கொழிப்பு திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான கூட்டம் போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில வியாழக்கிழமை (04) இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி எ.சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் போரதீவுப்பற்று செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டமானது எதிர்வரும் 10ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.  இதன்போது 7 நாட்களுக்குமான வேலைத்திட்டங்கள்  பிரிக்கப்பட்டன.

அந்த வகையில் எதிர்வரும் 10ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்வியுடன் சம்மந்தப்பட்ட பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் பார்வையிடப்படும்.  11ஆம் திகதி அனைத்து அரச திணைக்கள கட்டடங்கள் (வைத்தியசாலைகள், பொது நிறுவனங்கள், பொலிஸ் நிலையம், இராணுவ முகாம்) என்பன பார்வையிடப்படும். 12ஆம் திகதி உள்ளூராட்சி  திணைக்களத்துக்குட்பட்ட பொது இடங்கள், வடிகான்கள் என்பன பார்வையிடப்படும்.  13ஆம் திகதி அனைத்து மக்களின் வதிவிடங்களும் பார்வையிடப்படும்.  14ஆம் திகதி வழிபாட்டிடங்கள் பார்வையிடப்படும்.  15ஆம் திகதி சிறுகைத்தொழில் இடம்பெறும் இடங்கள் பார்வையிடப்படும்.  16ஆம் திகதி பஸ் டிப்போ, வீதியோரங்கள் என்பன பார்வையிடப்படும்.

டெங்கு பரவும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என வைத்திய அதிகாரி; எ.சண்முகநாதன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X