2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்விசார் சிற்றூழியர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் 9 பேருக்கு  கல்வி அமைச்சின் கல்விசார் சிற்றூழியர் நியமனக் கடிதங்களை   ஞாயிற்றுக்கிழமை (7) பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

இதன்போது கொக்கட்டிச்சோலை, பாலமுனை, காத்தான்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்படி இளைஞர், யுவதிகளுக்கு இந்த நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.

இவர்கள் 1.9.2014 முதல் கல்விசார் சிற்றூழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரின் காத்தான்குடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபையின் பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.எஸ்.சியாட் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X