2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புதிய மாடிக்கட்டடம் திறப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஓட்டமாவடி மர்க்கஸ் அந் நூர் கலாபீடத்தில் 02  கோடியே 15 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட 03 மாடிக்கட்டடம் ஞாயிற்றுக்கிழமை (7) திறந்து வைக்கப்பட்டது.

பறகஹதெனிய ஜமாத் அன்சாரி சுன்னதுல் முஹம்மதியா (துயுளுஆ) அமைப்பின் 02 கோடியே 15 இலட்சம் ரூபாய் நிதியளிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் வகுப்பறைக் கட்டடம், மாணவர் விடுதி, ஆராதனை மண்டபம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

கலாபீடத்தின் அதிபர் மௌலவி ஏ.ஹபீப் (காசிமி) தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் கல்லூரியின் தலைவர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மது, கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி வீ.ரீ.எம்.முஸ்தபா (தல்லிகி) கல்குடா உலமாசபை செயலாளர் மௌலவி எம்.எல்.இப்றாஹீம் (மதனி) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில் ஆறாம் ஆண்டு தொடக்கம் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரை கல்வி கற்பிக்கப்படுவதுடன், மார்க்கக் கல்வியும் போதிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X