2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார ஊக்குவிப்புக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக சுயதொழில் கடன் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு சர்வோதய பயிற்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது.

சுயதொழில் முயற்சியாளர்களுக்கிடையில் சுயதொழிலை மேம்படுத்துதல், சேமிப்பு, நீடித்து நிலைக்கக்கூடிய வாழ்வாதாரத் தொழில்களில் முதலீட்டை அதிகரித்தல், சந்தைப்படுத்தல், அநாவசிய முதலீடுகளை தவிர்த்தல் போன்றவை தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டன.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நுண்கடன் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதற்கு இலங்கை மத்திய வங்கி அனுசரணை வழங்குகின்றது.

இலங்கை மத்திய வங்கியின்  வறுமை ஒழிப்பு நுண்கடன்திட்ட குழுத் தலைவர் ஆர்.ஸ்ரீபத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு இலங்கை வங்கி சிரேஷ்ட முகாமையாளர்  எம்.ஐ.நவ்பீல், வங்கி வெளிக்கள உத்தியோகத்தர் பி.ஜெயரஞ்சனி மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய வங்கி ஊழியர்கள் மற்றும்  இலங்கை வங்கியின்   நிதியுதவியுடன் கிராமங்களில் இயங்கிவருகின்ற வாழ்வாதாரக் குழு அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X