2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கட்டுரை, கவிதை போட்டிகள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பில் உள்ள சர்வதேச உளவியல் கல்வி நிலையத்தால் உலக உளநல தினத்தை (ஒக்டோபர் - 10) முன்னிட்டு கட்டுரை, கவிதைப்போட்டிகளை சிரேஷ்ட மனநல வைத்தியர் பா.யூடி.ரமேஸ் ஜெயக்குமார் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 'மனப்பிளவை நோயுடன் உயிர்வாழ்தல்' என்ற தலைப்பில் கொண்டாடப்படும் இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக இப்போட்டிகளில் அனைவரும் கலந்துகொள்ள முடியும். 1ஆம் 2மஆம் 3ஆம்; இடங்களை  பெறுபவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

தலைப்பு : 'மனநோயாளர்களும் மனிதர்களே' (கட்டுரை 1,000 சொற்களுக்கு மேற்படாமலும் கவிதை 20 வரிகளுக்கு மேற்படாமலும் அமைதல் வேண்டும்)

நிபந்தனை : ஒருவர் ஒரு போட்டியில் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.

இறுதித்திகதி : கவிதை மற்றும் கட்டுரைகளை 2014.10.05 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியவாறு கீழ்க்காணும் முகவரிக்கு  அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.

சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம்,
இல: 25ஃ3, பிள்ளையார் கோவில் வீதி,
4ஆம் குறுக்கு, கல்லடி – வேலூர்,
மட்டக்களப்பு.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X