2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிராம மட்டக் குழுக்களை அறிவூட்டும் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


திவிநெகும தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்டத்தின் கிராம மட்ட குழுக்களை அறிவூட்டும் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று  வியாழக்கிழமை நடைபெற்றது. 

இப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 10 கிராம அலுவலகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 13,000 குடும்பங்களுக்கு திவிநெகும திட்ட நன்மைகளையும் வாழ்வாதாரத்திட்டங்களை மேம்படுத்தும் வழிவகைகளையும் பற்றி இக்கூட்டத்தில் அறிவூட்டப்பட்டதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹமத் ஹனீபா தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹமத் ஹனீபா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மகாலிங்கம், கணக்காளர் எஸ்.எச்.நௌபீக், பெரும்போக உத்தியோகஸ்தர் எம்.ஐ.பதூர்தீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X