2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் இவ்வருடம் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித்திட்டங்கள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்திகள் பற்றி  கலந்துரையாடப்பட்டன.

இப்பிரதேசத்தில் இவ்வருடம் பொருளாதார அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் 403.28 மில்லியன் ரூபாய்யும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் 44 மில்லியன் ரூபாய்யும் திவிநெகும திட்டத்தின் கீழ் 6.58 மில்லியன் ரூபாய்யும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் 1.60 மில்லியன் ரூபாய்யும் மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் 5.03 மில்லியன் ரூபாய்யும் விசேட திட்டத்தின் கீழ் 2.95 மில்லியன் ரூபாய்யும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் 3.40 மில்லியன் ரூபாய்யும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.குணரெட்ணம்  தெரிவித்தார்.

பிரதேச அபிருத்திக்குழுத் தலைவரும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பி.இந்திரகுமார், கோ.கருணாகரம், மா.நடராசா, இரா.துரைரெட்ணம், ஞா.கிருஷ்ணபிள்ளை, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X