2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொழில்நுட்ப அருங்காட்சியக கண்காட்சி

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

இளைய சமுதாயத்துக்;கும்  மாணவர்களுக்கும் கணினி  மற்றும் அது சார் அறிவுகளை தெரிந்துகொள்ளும் முகமாக இலவச தகவல் தொழில்நுட்ப அருங்காட்சியக கண்காட்சி; இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமாகியது. 

இந்த கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு மாநகரசபை பிரதி ஆணையாளர் எஸ்.தனஞ்சயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

வின் சிஸ்ரம் நெற்வோர்க் நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற இந்தக் கண்காட்சியை மேலும் பல இடங்களிலும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வின் சிஸ்ரம் நெற்வோர்க் முகாமையாளர் எம்.விக்ராஜ் தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட கணினிகளின் உதிரிப்பாகங்கள், தற்;போதைய புதிய வரவுகளான மைக்ரோ கமெரா, சிசீ.டி கமெரா உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X