2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாணவனை காணவில்லை

George   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை(19) முதல் காணவில்லை என மாணவனின் தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை(20) முறைப்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திலுள்ள ஹிழுறியா ஜும் ஆ பள்ளிவாயல் வீதியில் வசித்து வரும் றஊப் முஹம்மட் ஷியாம்(17) எனும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

வெள்ளிக்கிழமை(19) காலை 10.30 மணியளவில் வீட்டை விட்டுச் சென்ற குறித்த மாணவன் வீடு திரும்பவில்லையெனவும் அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லையெனவும் மாணவனின் தந்தை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இம் மாணவன் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த.உயர் தரத்தில், தகவல் தொழிநுட்ப பாடநெறியில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X