2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புன்னைக்குடா கடற்கரை வீதி, படையினரால் துப்பரவு

George   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரைக்கு செல்லும் வீதி, படையினரால் சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை(20) காலை சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஏறாவூர் புகையிரத நிலைய கடவையிலிருந்து புன்னைக்குடா கடற்கரை வரையான சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் வீதி 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக இவ்வாறு துப்புரவு செய்யப்படுகின்றது.

வீதியின் இரு மருங்கிலும் மண்டிக் கிடக்கும் பற்றைக் காடுகள் வெட்டி துப்புரவாக்கப்படுகின்றன.

இதனால் புன்னைக்குடா கடற்கரைக்குச் செல்லும் மீனவர்களும், ஐயன்கேணி, தளவாய், புன்னைக்குடா ஆகிய கிராமங்களில் வசிக்கும் தமிழ் முஸ்லிம் கிராம மக்களும் சௌகரியமாகப் பயணம் செய்ய முடியும் என்று கிராம வாசிகள் கூறுகின்றனர்.

சுமார் 100 படையினர் இந்த வீதியைத் துப்புரவாக்கும் சிரமதானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படையினர் குறிப்பிட்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X