2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு வாகன பேரணி

George   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


அமைதிக்கான சர்வதேச தினம் 21ஆம் திகதியாகும். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு ஜீவசக்தி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு வாகனப் பேரணி இன்று சனிக்கிழமை(20) வாழைச்சேனை சந்தியினை வந்தடைந்தது.

இன்று அதிகாலை வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமாகிய இப் பேரணி பனிச்சங்கேணி பாடசாலையைச் சென்று அங்கிருந்து வாழைச்சேனை, கிரான் சந்தி, செங்கலடி சந்தி, ஆகிய இடங்களில் தலா 10 நிமிடங்கள் தரித்து நின்று இன்று மாலை மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தினை சென்றடையும்.

2ஆம் நாள் பேரணி அம்பிளாந்துறை, பழுகாமம், போரதீவு, பட்டிருப்பு வழியாக அன்று பிற்பகல் கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலய மைதானத்தினை சென்றடையும்.

பட்டிருப்பு சந்தை தாழங்குடா சந்தை ஆரயம்பதி சந்தை ஆகிய இடங்களிலும் தலா 10 நிமிடங்கள் பேரணி தரித்து நிற்கும்.
இவ்வாறு வாகணப் பேரணி தரித்து நிற்கும் 10 நிமிடங்களிலும்  பிறேம் ராவத்தின் செய்தி ஒலிபரப்பப்படும்.

21 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணிக்கு சிவானந்த வித்தியாலய மைதானத்தில் நிகழ்வு இடம்பெறும். இதன்போதும் மேற்படி செய்தி ஒலிபரப்படுவதுடன் 100 பலூன்களும் பறக்கவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X