2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீள் குடியேறியுள்ள மக்களுக்கான கூட்டம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனானை மேற்கு பொத்தானை கிராமத்தில் மீள் குடியேறியுள்ள மக்களுக்கான கூட்டமொன்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.

இக்கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கடந்த திங்கட்கிழமை (15) அமைச்சர் பசீர் சேகுதாவூத் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பங்கு பற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்தக் கூட்டம் புனானை மேற்கு பொத்தானை கிராமத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் பசீர் சேகுதாவூதின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யு.எல்.எம்.என்.முபீன் இக்கிராமத்துக்கு சென்று அக்கிராமத்தில் மீள் குடியேறியுள்ள மக்களை சந்தித்ததுடன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இக் கூட்டத்தில் கேட்டறிந்து கொண்டார்.

இந்த கிராமத்தில் 110 முஸ்லிம் குடும்பங்களும் 80 தமிழ் குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.

இவர்கள் குடியிருக்கும் காணி மற்றும் பயிர்ச்செய்கை காணி என்பன வன பரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமானது எனக்கூறி இவர்களின் பயிர்ச் செய்கையை தடுப்பதாகவும் தொடர்ந்தும் இங்கு மக்கள் மீளக் குடியேறுவதற்கு வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் தடையாக இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

அத்தோடு கிராமத்திலுள்ள மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் காணி மற்றும் பயிர்ச் செய்கைக்குரிய காணி என்பவற்றுக்கு காணி உரிமம் வழங்கப்படல்  வேண்டும் மற்றும் இக் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படல் வேண்டும் என்பன போன்ற பிரச்சினைகளை கிராம மக்கள் முன் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக கிரான் பிரதேச செயலாளர் மற்றும் வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளை இக்கிராமத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மக்களை நேரடியாக சந்திக்க வைத்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னேடியாக, இக்கூட்டம் நடாத்தப்பட்டு அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் பசீர் சேகுதாவூதின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X